அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகரில் சிவன் கோயில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்த பெண் சாவு 

விருதுநகர் சீத்தாக்காளி கோயில் தெருவைச் சேர்ந்த செல்வரத்தினத்தின் மனைவி மகேஸ்வரி(52). இவர் வெள்ளிக்கிழமை காலையில் சிவன் கோயிலுக்கு வழிபாடு செய்வதற்காக

Updated On :2 ஜனவரி 2015, 11:31 am

விருதுநகர் சிவன் கோயில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்த பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    விருதுநகர் சீத்தாக்காளி கோயில் தெருவைச் சேர்ந்த செல்வரத்தினத்தின் மனைவி மகேஸ்வரி(52). இவர் வெள்ளிக்கிழமை காலையில் சிவன் கோயிலுக்கு வழிபாடு செய்வதற்காக சென்றாராம். அப்போது, வழிபாடு செய்வதற்கு முன் தெப்பக்குளத்திற்கு  சென்ற போது திடீரென கால் வழுக்கி தவறி குளத்திற்குள் மூழ்கினராம். இதை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து விரைந்து வந்து மீட்டு பார்த்ததில் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக திருக்கோயில் அலுவலர் ராஜேந்திரன் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் விரைந்து வந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

   மேலும், இது குறித்து போலீஸாரும் வழக்கு பதிவு செய்து சாவு குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.